HOT POST

6/recent/ticker-posts

நீங்கள் மீண்டும் புதிய கேஒய்சி (KYC) விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டுமா? RBI கூறுவது என்ன / Do You Need To Submit Fresh KYC Details Again

  • ஒருவர் வங்கியில் கணக்கைத் திறக்கும்போது, அவரது அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆதாரத்தை (Identity) சமர்ப்பிக்க வேண்டும்.
  • இதற்காக பான் கார்டு, ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் உட்பட பல ஆவணங்களை வங்கி உங்களிடம் கேட்கிறது. இந்த ஆவணங்களைச் சமர்ப்பித்து வங்கியில் கணக்கைத் திறந்தவுடன், மீண்டும் இந்த ஆவணங்கள் அனைத்தையும் சமர்ப்பிக்குமாறு வங்கி உங்களிடம் கேட்க முடியுமா? என்ற கேள்வி வங்கி வாடிக்கையாளரின் மனதில் எழலாம். 
  • இதைப்பற்றி இந்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் என்ன கூறுகின்றன என்பதை அறிந்து கொள்வோம்.
  • கடந்த சில தினங்களாக டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கேஒய்சி (KYC) விவரங்களை வங்கிக்கு சென்று சமர்ப்பிக்க வேண்டும், 
  • இல்லையெனில் வங்கி கணக்கு முடக்கப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்திகள் வெளியானது. இது வாடிக்கையாளர்கள் இடையே பெறும் குழப்பதை ஏற்படுத்தியது. இதுக்குறித்து ஆர்பிஐ வங்கி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
KYC குறித்து ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல் என்ன?
  • ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்களின்படி, உங்கள் கேஒய்சி விவரங்களில் எந்த மாற்றமும் இல்லை என்றால் மற்றும் நீங்கள் வங்கிக்கு முன்பு வழங்கிய உங்கள் கேஒய்சி தொடர்பான அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும்பட்சத்தில், அதில் எந்த மாற்றமும் இல்லை என்றால், நீங்கள் அவற்றை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. 
  • அத்தகைய சூழ்நிலையில் வாடிக்கையாளர்களின் சுய அறிவிப்பு போதுமானது. இதற்காக வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. 
  • உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல், பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண், ஏடிஎம் அல்லது இணையம்/ஆன்லைன் வங்கி மூலம் கேஒய்சி விவரங்களில் எந்த மாற்றமும் இல்லை என்று நீங்கள் அறிவிக்கலாம். 
  • அத்தகைய வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்குமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.
  • ஒருவேளை உங்கள் முகவரி மாறியிருந்தால், உங்கள் புதிய முகவரித் தகவல் மற்றும் அதன் ஆவணச் சான்று (Address Proof) மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும். 
  • உங்கள் கேஒய்சில் உள்ள முகவரியைத் தவிர மற்ற அனைத்து விவரங்களும் முன்பு போலவே இருந்தால், வங்கிக் கிளைக்குச் செல்லாமல், 
  • ஆன்லைன் மூலம் புதிய முகவரிச் சான்றையும் சமர்ப்பிக்கலாம். வாடிக்கையாளர் புதிய முகவரிச் சான்றைச் சமர்ப்பித்த இரண்டு மாதங்களுக்குள் வங்கிகள் புதிய முகவரிச் சான்றினைச் சரிபார்க்கலாம்.
எப்போது புதிய கேஒய்சி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்?
  • ஏற்கனவே வங்கியில் சமர்ப்பிக்கப்பட்ட உங்கள் ஆவணங்களில் பாஸ்போர்ட், ஆதார், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாக்காளர் அட்டை போன்ற ஆவணங்களில் ஏதாவது ஒரு ஆவணம் இல்லை என்றால், கேஒய்சியின் கீழ் புதிய ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு வங்கி உங்களைக் கேட்கலாம்.
  • வங்கியில் உங்கள் செல்லுபடியாகும் கேஒய்சி ஆவணங்களின் செல்லுபடியாகும் காலம் காலாவதியாகிவிட்டால், உதாரணமாக, வங்கிக்கு வழங்கப்பட்ட உங்கள் ஓட்டுநர் உரிமம் காலாவதியாகிவிட்டால், அதன் இடத்தில் புதிய செல்லுபடியாகும் ஆவணத்தை உங்களிடம் கேட்கலாம்.
KYC வீடியோ அழைப்பு மூலமாகவும் சமர்ப்பிக்கலாம்
  • கேஒய்சி அப்டேட் செய்யும் செயல்முறையை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்த மிகவும் எளிதாக்கியுள்ளது. வங்கிக் கிளைக்கு செல்லாமல், வீடியோ அழைப்பு (V-CIP) மூலமாகவும் வாடிக்கையாளர் ஆவணங்களை சமர்பிக்கலாம். 
  • When opening an account in a bank, one has to submit proof of identity and address. For this, the bank asks you for many documents including PAN card, Aadhaar card, driving license. 
  • Can the bank ask you to submit all these documents again once you have submitted these documents and opened an account with the bank? A question may arise in the mind of a bank customer.
  • Let us know what the rules and guidelines of the Reserve Bank of India say about this. For the past few days, bank customers have to go to the bank and submit their KYC details by December 31.
  • There were reports that the Reserve Bank of India has issued an order that otherwise the bank account will be frozen. This caused confusion among customers. An explanation has been given on behalf of RBI Bank in this regard.
What is RBI's instruction regarding KYC?
  • As per RBI's instructions, if there is no change in your KYC details and all the documents related to your KYC that you have provided earlier to the bank are correct and there is no change in them, you do not need to submit them again.
  • In such a situation self-declaration by customers is sufficient. No need to go to the bank branch for this.
  • You can report no change in KYC details through your registered email, registered mobile number, ATM or internet/online banking.
  • RBI has asked banks to provide such facility to customers.
  • If perhaps your address has changed, you need to resubmit your new address information and its Address Proof.
  • If all the details except the address in your KYC are same as before, without going to the bank branch,
  • New address proof can also be submitted online. Banks can verify the new address proof within two months of the customer submitting the new address proof.
When to submit new KYC documents?
  • Bank may ask you to submit new documents under KYC if any of your documents already submitted to the bank are missing such as passport, Aadhaar, driving license and voter card.
  • If the validity period of your valid KYC documents with the bank has expired, for example, if your driving license issued to the bank has expired, you may be asked for a new valid document in its place.
KYC can also be submitted through video call
  • The Reserve Bank of India (RBI) has made the process of updating KYC very easy. Customers can also submit documents through video call (V-CIP) without visiting a bank branch.

Post a Comment

0 Comments