HOT POST

6/recent/ticker-posts

சிபில் ஸ்கோர் தெரிந்து கொள்வது எவ்வாறு? | HOW TO CHECK SIBIL SCORE OF YOU

  • வங்கிகளுடன் நாம் மேற்கொள்ளும் கடன் பரிவர்த்தனைகளின் தகுதி அடிப்படையில் கொடுக்கப்படும் மூன்று இலக்க எண், சிபில் ஸ்கோர் (Credit Information Bureau (India) Limited - CIBIL).
  • இது 300 - 900 வரை கொடுக்கப்படுகிறது. ஒருவர் தன் கடன்களை முறையாகத் திருப்பிச் செலுத்துவது உள்ளிட்ட தொகுப்பு விவரங்களின் அடிப்படையில் இது ஒருவருக்கு வழங்கப்படும். 
  • அந்த வகையில் 700 - 900 சிபில் ஸ்கோரை பராமரிப்பது சிறப்பானது. அதற்குப் பின்பற்றிய வேண்டிய வழிமுறைகளைப் பார்க்கலாம்.
  • நீங்கள் வங்கியில், வங்கியல்லாத நிதி நிறுவனங்களில் வாங்கிய கடன் தவணைகளை, அதற்குரிய காலத்துக்குள் கட்டுவது மிக அவசியம். இதற்கு, உரிய தவணை தேதிக்கு முன்னதாகவே பணத்தை வங்கிக் கணக்கில் தேவையான அளவில் வைத்திருக்க வேண்டும். இதற்கென ஒரு நினைவூட்டல் (Reminder) வைத்துக்கொள்வது நல்லது.
  • உங்களுடைய பில்களை கட்ட பெரும்பாலும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துங்கள்; கிரெடிட் கார்டு தவணைகளை சரியான தேதியில் கட்டுங்கள். இது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை அதிகப்படுத்தும்.
  • உங்களுக்கு எவ்வளவு கிரெடிட் உள்ளதோ, அதற்குள்ளாக மட்டுமே கடன் பெறுங்கள். மேலும், தவிர்க்க முடியவில்லை என்றால் மட்டுமே புதிய கடன் பெறுங்கள். இல்லையென்றால், உங்களுக்கு எப்போதும் கடன் தேவைப்படுகிறது என்று அறியப்படுவீர்கள்.
  • ஒன்றுக்கு மேற்பட்ட உங்கள் கடன்கள், ஆரோக்கியக் கலவையாக இருக்கட்டும். வீட்டுக்கடன் மற்றும் வாகனக் கடன் போன்ற பாதுகாப்பான கடன்களை நீண்ட காலத்துக்கும், பெர்சனல் லோன் மற்றும் கிரெடிட் கார்டு போன்ற பாதுகாப்பற்ற கடன்களை குறுகிய காலத்துக்கும் பெறுங்கள். அதிக பாதுகாப்பற்ற கடன்கள், நெகட்டிவ்வாகப் பார்க்கப்படும்.
  • நீங்கள் நேரடியாகப் பெற்ற கடன் மட்டுமல்லாது, கியாரன்டி கொடுத்த கடன்கள், ஜாயின்ட் அக்கவுன்ட், இணைந்து கையெழுத்திட்ட அக்கவுன்ட்கள் என அனைத்தையும் செக் செய்யுங்கள். அவற்றில் தவணை தவறினாலும் உங்களுக்கும் அதில் பொறுப்புண்டு, பங்குண்டு என்பதாக எடுத்துக்கொள்ளப்படும்.
  • வருடம் முழுக்க அவ்வப்போது உங்கள் கிரெடிட் ஸ்கோரை செக் செய்துகொள்ளுங்கள். சில நேரங்களில், நீங்கள் கட்டி முடித்த கடன் தொகை அப்டேட் ஆகாமல் இருக்கும். அது ஸ்கோரை குறைக்கும். இப்படியான தவறுகளை சிபில் ஏற்படுத்தலாம் என்பதால், செக் செய்து, சரிசெய்துகொள்ள வேண்டும்.
  • லோன் எடுக்கும்போது இ.எம்.ஐ தொகை குறைவாக இருக்க வேண்டி, கடன் காலத்தை நீட்டிப்பது வழக்கம். அதே நேரம், உங்கள் கிரெடிட் லிமிட்டை அதிகரித்துக்கொள்வது சிபில் ஸ்கோர் பெற கைக்கொடுக்கும்.
  • ஒரே நாளில் சிபில் ஸ்கோரை அதிகரிக்க முடியாது என்பதால், ஒவ்வொரு தவணையையும் சரியான நேரத்தில் செலுத்தி வர வேண்டும். அத்துடன், கடன் பெறுவது, அடைப்பது போன்றவற்றில் ஒழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டும்.
  • CIBIL score (Credit Information Bureau (India) Limited - CIBIL) is a three-digit number given on the merit basis of our credit transactions with banks.
  • It is given from 300 - 900. It is given to a person based on set details including regular repayment of his loans.
  • In that sense maintaining a CIBIL score of 700 - 900 is ideal. Let's see the steps to be followed.
  • It is very important to pay the loan installments you have taken from banks and non-banking financial institutions within the due period. For this, the required amount of money should be kept in the bank account before the due installment date. It is good to keep a reminder for this.
  • Use credit cards mostly to pay your bills; Make credit card installments on time. This will boost your credit score.
  • Borrow only within the limits of your credit. Also, take a new loan only if unavoidable. Otherwise, you will always be known as needing a loan.
  • Let your debts, more than one, be a healthy combination. Get secured loans like home loan and car loan for long term and unsecured loans like personal loan and credit card for short term. More unsecured loans are viewed negatively.
  • Check not only your direct loan, but also guaranteed loans, joint accounts, co-signed accounts. Even if the installment is missed in them, you are also responsible and considered to have participated in it.
  • Check your credit score periodically throughout the year. Sometimes, the loan amount you have completed may not be updated. It will lower the score. As Sibyl can cause such errors, check and fix them.
  • When taking a loan, the EMI amount should be low and the loan period is usually extended. At the same time, increasing your credit limit can help improve your CIB score.
  • As CIBIL score cannot be increased in one day, every installment should be paid on time. Also, discipline should be observed in borrowing and repayment.

Post a Comment

0 Comments